/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வழக்குகளை சமாளிக்க அச்சம்... விழுப்புரத்தில் அ.தி.மு.க., அறிவித்த ஆர்ப்பாட்டம் வாபஸ் வழக்குகளை சமாளிக்க அச்சம்... விழுப்புரத்தில் அ.தி.மு.க., அறிவித்த ஆர்ப்பாட்டம் வாபஸ்
வழக்குகளை சமாளிக்க அச்சம்... விழுப்புரத்தில் அ.தி.மு.க., அறிவித்த ஆர்ப்பாட்டம் வாபஸ்
வழக்குகளை சமாளிக்க அச்சம்... விழுப்புரத்தில் அ.தி.மு.க., அறிவித்த ஆர்ப்பாட்டம் வாபஸ்
வழக்குகளை சமாளிக்க அச்சம்... விழுப்புரத்தில் அ.தி.மு.க., அறிவித்த ஆர்ப்பாட்டம் வாபஸ்
ADDED : ஜூன் 25, 2024 06:55 AM

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய பலி மற்றும் தி.மு.க., அரசை கண்டித்தும் நேற்று தமிழகம் முழுதும் மாவட்ட தலை நகரங்களில் அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்றார். இதேபோல் விழுப்புரம் மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரே, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அப்படி இருந்தும் அ.தி.மு.க.,சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டதற்கு, போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முன்னாள் அமைச்சர் ஏற்பாடு செய்தார். இதற்காக கடந்த 22ம் தேதி, விழுப்புரத்தில் கட்சி அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளை அழைத்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆர்ப்பாட்டம் தொடர்பாக அ.தி.மு.க., ஐ.டி.,பிரிவு சார்பில் சமூக வளைதலத்தில் விளம்பரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென, 24ம் தேதி நடத்துவதாக இருந்த ஆர்ப்பாட்டம் தேர்தல் நடத்தை விதியால் ரத்து செய்யப்படுவதாக அ.தி.மு.க., ஐ.டி., பிரிவு சார்பில் சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியானது.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்ட நிலையில், திடீரென அ.தி.மு.க.,பின் வாங்கியது பற்றி விசாரித்த போது, தடையை மீறி ஆர்ப்பாட்டத்திற்கு வரும் அ.தி.மு.க.,வினரை விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியில் போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர்.
மேலும், வழக்கமாக தடையை மீறியது குறித்து வழக்கு பதிவு செய்யும் போது, கூடுதலாக தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாகவும் தனியாக போலீசார் வழக்கு பதிவு செய்யும் நிலை ஏற்பட்டது.
இது போன்று, வழக்குப் பதிவு செய்யப்பட்டால், கோர்ட்டுக்கு அனுப்பி போலீசார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள்.
இதனால் போராட்டத்தில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினருக்கு சிக்கல் ஏற்படும் என்பதால், கடைசி கட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதிலிருந்து அ.தி.முக., பின்வாங்கியதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-நமது நிருபர்-