/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மூடிக்கிடக்கும் கால்நடை மருந்தகம் அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி மூடிக்கிடக்கும் கால்நடை மருந்தகம் அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி
மூடிக்கிடக்கும் கால்நடை மருந்தகம் அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி
மூடிக்கிடக்கும் கால்நடை மருந்தகம் அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி
மூடிக்கிடக்கும் கால்நடை மருந்தகம் அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜூன் 24, 2024 05:40 AM

வானுார், : இரும்பை சாலையில் மூடிக்கிடக்கும் கால்நடை மருந்தகத்தால், கால்நடை வளர்ப்போர் அதிகாரிகள் மீது அதிருப்தியடைந்துள்ளனர்.
வானுார் தாலுகா, திருச்சிற்றம்பலம் பகுதியைச் சுற்றி இரும்பை, கோட்டக்கரை, திருச்சிற்றம்பலம், இடையஞ்சாவடி, ராவுத்தன்குப்பம், அச்சரம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இப்பகுதிகளில், ஆடு, மாடு, எருமை, கோழி போன்ற கால்நடைகளை வளர்க்கின்றனர்.
கால்நடை வளர்ப்போரின் வசதிக்காக, இரும்பை சாலையில் மின்துறை அலுவலகம் எதிரே கால்நடை மருந்தகம் உள்ளது. இதன் மூலம், தினமும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் பயனடைந்து வருகின்றனர்.
வாரத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே இந்த கால்நடை மருந்தகம் திறக்கப்படுகிறது. பிற நாட்களில் கால்நடைகளுக்கு திடீரென நோய் பாதிப்பு ஏற்பட்டால், சிகிச்சை பெற முடியாத சூழல் நிலவி வருகிறது.
இந்த மருந்தகத்தை நம்பி வரும் கால்நடை வளர்ப்போர், வெகு நேரம் மருந்தக வாசலில் கால்நடைகளுடன் அமர்ந்து விட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். ஒரு சில நேரங்களில் சிகிச்சை பெற முடியாத சூழல் ஏற்படுவதோடு, கால்நடைகள் இறக்கும் நிலை ஏற்படுகிறது.
தற்போது, கோடை மழை பெய்து வருகிறது. இதனால் கால்நடைகளுக்கு கண்டிப்பாக நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், எப்போதாவது திறக்கப்படும் கால்நடை மருந்தகத்தால், எந்த பயனும் இல்லை. தினமும் கால்நடை மருந்தகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், 'காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரையும், மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரையும் மருந்தகம் திறந்திருக்கும் என பெயர் பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தினமும் வேலை நாட்களில் திறப்பது கிடையாது. இதனால் வெகு நேரம் காத்திருந்து வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, கால்நடை வளர்ப்போரின் நலன் கருதி மருந்தகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.