ADDED : ஜூன் 12, 2024 11:51 PM
செஞ்சி : செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டையை சேர்ந்தவர் கோபால் மகன் பிச்சாண்டி 64; விவசாயி.
இவர் நேற்று முன்தினம் விவசாய நிலத்திற்கு சென்று வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு, இரவு 9 மணியளவில் வீட்டிற்கு திருப்பி வந்து கொண்டிருந்தார். கெங்கவரம் சாலை வழியாக நடந்து சென்ற போது பின்னால் வந்த பைக், பிச்சாண்டி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தவர், அதே இடத்தில் இறந்தார்.
சத்தியமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.