/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பொன்முடி மீதான குவாரி வழக்கு மாஜி டி.எஸ்.பி.,க்கள் சாட்சியம் பொன்முடி மீதான குவாரி வழக்கு மாஜி டி.எஸ்.பி.,க்கள் சாட்சியம்
பொன்முடி மீதான குவாரி வழக்கு மாஜி டி.எஸ்.பி.,க்கள் சாட்சியம்
பொன்முடி மீதான குவாரி வழக்கு மாஜி டி.எஸ்.பி.,க்கள் சாட்சியம்
பொன்முடி மீதான குவாரி வழக்கு மாஜி டி.எஸ்.பி.,க்கள் சாட்சியம்
ADDED : ஜூலை 24, 2024 06:11 AM
விழுப்புரம் : அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் இரு ஓய்வு பெற்ற டி.எஸ்.பி,.க்கள் சாட்சியம் அளித்தனர்.
விழுப்புரம் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் நடந்த முறைகேடு தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உட்பட 8 பேர் மீது, கடந்த 2012ம் ஆண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் இதுவரை 36 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 28 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
நேற்று நடந்த விசாரணையில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.,க்கள் குப்புசாமி, பன்னீர்செல்வம், திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் ஆகியோர் நீதிபதி பூர்ணிமா முன் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இவ்வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது.