/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 4 மாதங்களாக தொடரும் தேர்தல் கட்டுப்பாடுகள் நலத்திட்ட உதவி பெற முடியாமல் மக்கள் தவிப்பு 4 மாதங்களாக தொடரும் தேர்தல் கட்டுப்பாடுகள் நலத்திட்ட உதவி பெற முடியாமல் மக்கள் தவிப்பு
4 மாதங்களாக தொடரும் தேர்தல் கட்டுப்பாடுகள் நலத்திட்ட உதவி பெற முடியாமல் மக்கள் தவிப்பு
4 மாதங்களாக தொடரும் தேர்தல் கட்டுப்பாடுகள் நலத்திட்ட உதவி பெற முடியாமல் மக்கள் தவிப்பு
4 மாதங்களாக தொடரும் தேர்தல் கட்டுப்பாடுகள் நலத்திட்ட உதவி பெற முடியாமல் மக்கள் தவிப்பு
ADDED : ஜூன் 25, 2024 06:58 AM

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக தொடரும் தேர்தல் நடத்தை விதிகளின் கட்டுப்பாடுகளால், குறைகேட்புக் கூட்டங்களில் மனு அளிக்க முடியாமலும், நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் காரணமாக, கடந்த மார்ச் 16ம் தேதி முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தது. ஏப்ரல் 19ல் தேர்தல் நடந்து முடிந்து, ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு ஜூன் 7ம் தேதி வரை நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், மாவட்டத்தில் குறைகேட்புக் கூட்டம் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் போன்றவை நடத்தப்படாமல் இருந்தது.
பொது மக்களிடம் கோரிக்கைகள் பெற்று குறைகள் தீர்க்கும் குறைகேட்புக் கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் போன்ற பணிகளும் 3 மாதங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததால், மீண்டும் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஜூலை 10ம் தேதி இடைத் தேர்தலும், ஓட்டு எண்ணிக்கை 13ம் தேதியும் நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள், மீண்டும் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அமலாகி நடைமுறையில் உள்ளது.
இதனால், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வந்த வாராந்திர குறைகேட்பு முகாம் தொடர்ந்து நடை பெறாமல் உள்ளது. மீண்டும் இடைத் தேர்தல் அறிவிப்பால், 3 மாதங்களைக் கடந்து மேலும் ஒரு மாதம் பொதுமக்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பக் கூட்டங்கள் நடைபெறாமல் உள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை என்பதால், வாராந்திர குறைகேட்புக் கூட்டம் நடைபெறும் என்ற எண்ணத்தில், ஏராளமான பொதுமக்கள், கோரிக்கை மனுக்களுடன் நேற்று காலை முதல் மதியம் 2:00 மணி வரை வருகை தந்தனர்.
கலெக்டர் அலுவலக வாயிலில் போலீசார் பரிசோதனை செய்து அனுப்பினர். ஆனால், மனுக்கள் பெறும் குறைகேட்புக் கூட்டம் நடக்காததால் பொது மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
வழக்கம் போல், கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்படும் மனுக்கள் பெறும் பெட்டி காலை 10:00 மணி வரை வைக்கப்படவில்லை.
ஏராளமான மக்கள் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர். உடன், அங்கிருந்த போலீசார், அறையில் இருந்த மனுக்கள் பெறும் பெட்டியை எடுத்து வந்து, கலெக்டர் அலுவலக வாயில் பகுதியில் வைத்தனர்.
அதன் பிறகே கலெக்டர் அலுவலக ஊழியர்கள் தாமதமாக வந்தனர். மனுக்கள் பெறும் பெட்டியில் மனுக்கள் செலுத்துவதால் நடவடிக்கை எடுக்கப்படுமா என சந்தேகத்துடன் மக்கள் கேட்டபடி சென்றனர்.
சிலர், அவசரமான மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா என சந்தேகம் எழுப்பினர். பெட்டியில் பெறப்படும் மனுக்கள், அவ்வப்போது துறை சார்ந்த அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அலுவலர்கள் குறிப்பிட்டனர்.
தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் நடைபெறாததால் பொதுமக்கள் மனுக்களை பெட்டியில் போட்டனர்.
தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் நடைபெறாததால் பொதுமக்கள் மனுக்களை பெட்டியில் போட்டனர்.