மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
ADDED : ஜூலை 14, 2024 03:39 PM
விழுப்புரம்: கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லட்சுமி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மின்பகிர்மான வட்ட தலைவர் தலைமையில், கோட்ட அளவில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், அந்தந்த கோட்ட அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காலை 11:00 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
அதன்படி, 16ம் தேதி செஞ்சி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 23ம் தேதி திண்டிவனம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடக்கிறது.
இந்த கூட்டங்களில் மின் நுகர்வோர் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு, தங்களின் குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறலாம். அன்றைய தினம் அரசு விடுமுறையாக இருப்பின், அதற்கு அடுத்து வரும் வேலை நாளன்று இந்த மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடக்கும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.