/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி வேட்பாளர் முதல்வரிடம் வாழ்த்து இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி வேட்பாளர் முதல்வரிடம் வாழ்த்து
இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி வேட்பாளர் முதல்வரிடம் வாழ்த்து
இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி வேட்பாளர் முதல்வரிடம் வாழ்த்து
இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி வேட்பாளர் முதல்வரிடம் வாழ்த்து
ADDED : ஜூலை 14, 2024 11:05 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., வேட்பாளர் சிவா முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 ஓட்டுகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர் அன்புமணியை விட 67 ஆயிரத்து 757 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து அவர், நேற்று காலை 10:30 மணிக்கு சென்னை, அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தனது தேர்தல் வெற்றி சான்றிதழை கொடுத்து வாழ்த்து பெற்றார்.
தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி., அமைச்சர்கள் துரை முருகன், சிவசங்கர், நேரு, வேலு, அன்பரசன், மகேஷ், மூர்த்தி, தங்கம் தென்னரசு, கணேசன், மஸ்தான், லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணைச் செயலாளர் இளந்திரையன், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ரவிக்குமார் எம்.பி., தேர்தல் பொறுப்பாளர் குணாளன்.
ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால், ராஜா, முருகன், மும்மூர்த்தி, முருகவேல், ஒன்றிய சேர்மன்கள் வாசன், கலைச்செல்வி, சங்கீதஅரசி, சச்சிதானந்தன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.