/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ரயில்வே வாரிய உறுப்பினர் பணியாளர்களுடன் கலந்துரையாடல் ரயில்வே வாரிய உறுப்பினர் பணியாளர்களுடன் கலந்துரையாடல்
ரயில்வே வாரிய உறுப்பினர் பணியாளர்களுடன் கலந்துரையாடல்
ரயில்வே வாரிய உறுப்பினர் பணியாளர்களுடன் கலந்துரையாடல்
ரயில்வே வாரிய உறுப்பினர் பணியாளர்களுடன் கலந்துரையாடல்
ADDED : ஜூலை 12, 2024 11:07 PM

விழுப்புரம்: ரயில்வே வாரியம் உள்கட்டமைப்பு உறுப்பினர், விழுப்புரம் ரயில் நிலையத்தில் பணியாளர்களோடு கலந்துரையாடினார்.
டில்லியில் இருந்து ரயில்வே வாரிய உள்கட்டமைப்பு உறுப்பினர் அனில்குமார் கண்டேல்வால், தமிழகத்தில் 2 நாள் பயணமாக வந்துள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் விழுப்புரம் ரயில் நிலையம் வந்தார். பின், ரயில்நிலைய மேலாளர்கள், ரயில் ஓட்டுநர்கள், பொறியியல் பிரிவு பணியாளர்கள், சிக்னல் பிரிவு, தொலை தொடர்பு, சரக்கு பெட்டி பணியாளர்களோடு கலந்துரையாடினார்.
அப்போது ரயில்களை ஒழுங்காக இயக்குவதோடு மட்டுமின்றி, பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் வழங்க அனைத்து நிலைகளிலும் பணியாற்றும் பணியாளர்களை பாராட்டினார். பின் அவர், ரயில்வே துறையில் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றியும், அனைத்து தகவல்களை தெரிந்து கொண்டு பணிபுரிவது பற்றியும் கூறினார். பின், பொறியியல் பாதுகாப்பு குறித்த கையேட்டை வெளியிட்டார்.
தெற்கு ரயில்வே தலைமை மின் பொறியாளர் சோமேஷ்குமார், முதன்மை தலைமை பொறியாளர் சங்கர் கெலாட், முதன்மை தலைமை சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியாளர் திவாரி, தலைமை நிர்வாக அலுவலர் மனுவால், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.