/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆனத்துார் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா ஆனத்துார் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
ஆனத்துார் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
ஆனத்துார் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
ஆனத்துார் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
ADDED : ஜூலை 27, 2024 01:59 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஆனத்துார் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையெடுத்து தினசரி இரவு சாமிக்கு சிறப்பு பூஜையும், வீதியுலா மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று நடந்தது.
இதையொட்டி நேற்று காலை அரவாண், வீரபத்திரன் சாமி வீதியுலாவும் அரவாண் சிரசு ஏற்றும் நிகழ்ச்சியும், அரவாண் கலப்பலியும் நடந்தது. தொடர்ந்து பகல் 1 மணிக்கு மாடு வளைத்தல், கோட்டை இடித்தல் மாலை 6:00 மணிக்கு அக்னி வசந்த உற்சவம் நடைபெற்றது. இதில் திருவெண்ணெய்நல்லுார் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.