Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 3 ஆண்டுகளில் ரூ.1 கோடிக்கு வளர்ச்சி பணி செங்காடு ஊராட்சி தலைவர் பெருமிதம்

3 ஆண்டுகளில் ரூ.1 கோடிக்கு வளர்ச்சி பணி செங்காடு ஊராட்சி தலைவர் பெருமிதம்

3 ஆண்டுகளில் ரூ.1 கோடிக்கு வளர்ச்சி பணி செங்காடு ஊராட்சி தலைவர் பெருமிதம்

3 ஆண்டுகளில் ரூ.1 கோடிக்கு வளர்ச்சி பணி செங்காடு ஊராட்சி தலைவர் பெருமிதம்

ADDED : ஜூலை 18, 2024 11:29 PM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: கோலியனுார் அடுத்த செங்காடு ஊராட்சியில் 3 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து செங்காடு ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி குணசேகரன் கூறியதாவது:

செங்காடு ஊராட்சியில், அமைச்சர் பொன்முடி வழிகாட்டுதலின்படி, லட்சுமணன் எம்.எல்.ஏ., பரிந்துரையின் பேரில், கடந்த 3 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. செங்காடு ஊராட்சி நுாலக கட்டடம் சீரமைப்பு, ரேஷன் கடை கட்டடம், அய்யாங்குளம் தடுப்புச் சுவர் ஆகிய திட்ட பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சமையலறை கட்டடம், செங்காடு - பகண்டை ரோட்டில் தார் சாலை, குரும்பன்கோட்டை தடுப்புச் சுவர் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

நாறு நாள் வேலை திட்டத்தில் செங்காடு மாதா கோவில் நடுத்தெருவில் சிமென்ட் சாலை, ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் சிமென்ட் சாலை, சுடுகாடு கொட்டகை, கரும காரிய கட்டடம் ஆகிய பணிகள் செய்யப்பட்டுள்ளது.

ஊராட்சியில் 5 மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகள், 3 கைப்பம்பு, 7 மினி குடிநீர் டேங்க்குகள், ஒரு ைஹமாஸ் விளக்கு, 148 எல்.இ.டி., பல்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி வளர்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் ஒத்துழைப்புடன் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு ஜெயலட்சுமி குணசேகரன் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us