/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வளர்ச்சி திட்ட பணி: கலெக்டர் ஆய்வு வளர்ச்சி திட்ட பணி: கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி திட்ட பணி: கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி திட்ட பணி: கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி திட்ட பணி: கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 21, 2024 07:43 AM

வானுார்: வானுார் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
வானுார் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கப்பட்டு, கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடக்கிறது. இப்பணியை கலெக்டர் பழனி ஆய்வு செய்ததுடன், கரைகளை சுற்றி மரக்கன்றுகள் நட்டு பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின், அதே பகுதியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், 14.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தண்ணீர் குளம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டார்.
தொடர்ந்து, கடங்கப்பட்டு ஊராட்சி, கொண்டலம்குப்பம் கிராமத்தில் பிரதம மந்திரி ஜென்மான் திட்டத்தின் கீழ், 21 இருளர்களுக்கு 1.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடியிருப்பு வீடுகள் கட்டும் பணியை பார்வையிட்டார். அப்பகுதியில், சாலை, குடிநீர், மின்சாரம், சுகாதார வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளை உடனடியாக மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், வானுார் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, வானுார் தாசில்தார் நாராயணமூர்த்தி, வானுார் பி.டிஓ.,க்கள் தேவதாஸ், கார்த்திகேயன், பொறியாளர் அம்பிகா, ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.