Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

ADDED : ஜூலை 13, 2024 12:16 AM


Google News
மயிலம்: மயிலம் அருகே ஐவேலியில் வசிக்கும் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மயிலம் அருகே உள்ளது ஐவேலி கிராமம் இங்கு வசித்து வருபவர் ரஜினிகாந்த். இவருடைய மகள் சிவரஞ்சனி, 22; விழுப்புரம், ஆனங்கூர் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் அபிமன்யு, 25; இருவரும் விழுப்புரம் அரசினர் கலைக்கல்லூரியில் படித்து வந்தனர்.அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர், இவர்கள் ரகசியமாக இரு வீட்டிற்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இது குறித்த தகவல் சிவரஞ்சினியின் வீட்டிற்கு தெரிந்தவுடன் பிரசனை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிவரஞ்சனி, திண்டிவனம் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அபிமன்யு தனியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி, அதில் சிவரஞ்சனியின் நெருக்கமான படத்தை வெளியிடப் போவதாகவும் கூறியுள்ளார். பின்னர் அவரை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து சிவரஞ்சனி மயிலம் போலீசில் கொடுத்துள்ள புகாரின் பேரில், அபிமன்யுவை, மயிலம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us