/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரத்தில் நகராட்சி குடிநீர் சப்ளை பாதிப்பு; பொதுமக்கள் அவதி விழுப்புரத்தில் நகராட்சி குடிநீர் சப்ளை பாதிப்பு; பொதுமக்கள் அவதி
விழுப்புரத்தில் நகராட்சி குடிநீர் சப்ளை பாதிப்பு; பொதுமக்கள் அவதி
விழுப்புரத்தில் நகராட்சி குடிநீர் சப்ளை பாதிப்பு; பொதுமக்கள் அவதி
விழுப்புரத்தில் நகராட்சி குடிநீர் சப்ளை பாதிப்பு; பொதுமக்கள் அவதி
ADDED : ஜூன் 16, 2024 11:43 PM

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி குடிநீரேற்று நிலையத்தில் மோட்டார் பழுதால், சில இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் நகரில் உள்ள 42 வார்டுகளில், 1.50 லட்சம் மக்கள் வரை வசிக்கின்றனர். இவர்களுக்கு, விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு நீரேற்று நிலையம், ஆனாங்கூர் பகுதி நீரேற்று நிலையங்கள் மூலம் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தினசரி அங்குள்ள போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து, நகரில் உள்ள குடிநீர் டேங்க்குகளுக்கு அனுப்பி அங்கிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், சாலாமேடு, பாணாம்பட்டு உள்ளிட்ட புதிய வார்டு பகுதிகளுக்கு நகராட்சி குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.
அந்த பகுதிகளில் பழைய ஊராட்சியில் இருந்த ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், விழுப்புரம் நகரில் கடந்த ஒரு வாரமாக சில இடங்களில் குடிநீர் விநியோகம் பாதித்துள்ளது. புறநகரில் சில இடங்களில், வீடுகளுக்கு குடிநீர் வராததால், வழக்கம் போல், நகரில் நகராட்சி குடிநீர் பிடிக்கும் பகுதிக்கு பலர் படையெடுத்து வருகின்றனர்.
விழுப்புரம் புதிய நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் 24 மணி நேரமும் குடிநீர் வரும் நிலையில், அங்கேயும் சில தினங்களாக குடிநீர் வரத்து குறைந்து, குடிநீர் சீராக வருகிறது.
இதனால், பொதுமக்கள், கடைகாரர்கள் குடிநீர் எடுக்க நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், எல்லீஸ்சத்திரம் நீரேற்று நிலையத்தில் ஒரு மின் மோட்டார் பழுதானதால், குறிப்பிட்ட சில பகுதிக்கு மட்டும் இரு தினங்கள் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
பிற குடியிருப்பு பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மோட்டார் சீர் செய்யப்பட்டுள்ளதால், குடிநீர் விநியோகம் சீரடையும்' என்றனர்.