ADDED : ஜூன் 30, 2024 06:39 AM
மயிலம் : மயிலம் அருகே மின்சாரம் தாக்கி பசு மாடு இறந்தது.
மயிலம் அடுத்த பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவர், நேற்று முன்தினம் காலை 11:00 மணியளவில் தனது பசு மாட்டை சங்கராபரணி ஆறு அருகே மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். அப்போது, பசுவை முன்னே விட்டு இவர் பின்னால் சென்றார்.
சாய்பாபா கோவில் அருகே சென்றபோது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை பசு மாடு மிதித்த போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தது. அதிர்ஷ்டவசமாக வடிவேல் உயிர்தப்பினார்.
மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.