/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விதி மீறிய வெளி மாநில ஆம்னி பஸ்கள் பறிமுதல் விதி மீறிய வெளி மாநில ஆம்னி பஸ்கள் பறிமுதல்
விதி மீறிய வெளி மாநில ஆம்னி பஸ்கள் பறிமுதல்
விதி மீறிய வெளி மாநில ஆம்னி பஸ்கள் பறிமுதல்
விதி மீறிய வெளி மாநில ஆம்னி பஸ்கள் பறிமுதல்
ADDED : ஜூன் 20, 2024 08:20 PM
வானுார் : விக்கிரவாண்டி, மொரட்டாண்டியில் விதிமுறை மீறி இயக்கப்பட்ட 9 வெளி மாநில ஆம்னி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை - திருச்சி தேசிய நெஞ்சாலை மற்றும் புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், வெளிமாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் துணை போக்குவரத்து ஆணையரின் உத்தரவின்பேரில் வாகன சோதனை நடந்தது. திண்டிவனம் ஆர்.டி.ஓ., முக்கண்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுந்தர்ராஜன், கோவிந்தராஜ் மற்றும் சிறப்பு குழுவினர் விக்கிரவாண்டி மற்றும் மொரட்டாண்டி சுங்கச்சாவடிகள் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், அனுமதிச் சீட்டுக்கு புறம்பாக பயணிகளிடம் தனி நபர் கட்டணம் வசூலித்தது. தடம் பேருந்து போல் வெவ்வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்கியது சோதனையில் கண்டறியப்பட்டது. மொத்தம் 91 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் விதிமீறிய 9 வெளிமாநில ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்தனர்.