/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இடைத்தேர்தல் அறிவிப்பு கலெக்டர் ஆய்வு இடைத்தேர்தல் அறிவிப்பு கலெக்டர் ஆய்வு
இடைத்தேர்தல் அறிவிப்பு கலெக்டர் ஆய்வு
இடைத்தேர்தல் அறிவிப்பு கலெக்டர் ஆய்வு
இடைத்தேர்தல் அறிவிப்பு கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 11, 2024 06:53 AM

விக்கிரவாண்டி: தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு ஓட்டு பெட்டிகள் பாதுகாப்பு அறை மற்றும் ஓட்டு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10 ம்தேதி நடைபெற உள்ளது.ஓட்டு எண்ணிக்கை 13 ம் தேதி நடைபெறுகிறது .இதையொட்டி ஓட்டு பெட்டிகள் பாதுகாப்பு அறை(ஸ்டிராங் ரூம் ) , ஓட்டு எண்ணிக்கைமையம் அமைக்கும் பொருட்டு விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று பிற்பகல் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி ஆய்வு செய்தார் .
தாசில்தார் யுவராஜ், பி.டி.ஓ.,க்கள் பாலச்சந்திரன், குலோத்துங்கன், ஒன்றிய பொறியாளர் முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர் .