Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விக்கிரவாண்டியில் பசுமை தாயக தலைவர் பா.ம.க., வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பு

விக்கிரவாண்டியில் பசுமை தாயக தலைவர் பா.ம.க., வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பு

விக்கிரவாண்டியில் பசுமை தாயக தலைவர் பா.ம.க., வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பு

விக்கிரவாண்டியில் பசுமை தாயக தலைவர் பா.ம.க., வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பு

ADDED : ஜூன் 30, 2024 06:44 AM


Google News
Latest Tamil News
விக்கிரவாண்டி, : 'உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்' என சவுமியா அன்புமணி பேசினார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் அன்புமணிக்கு ஆதரவு கேட்டு கோழிப்பட்டு, அரியலுார், திருக்கை ஆகிய இடங்களில் பசுமைத்தாயக தலைவர் சவுமியா அன்புமணி பேசுகையில், 'இட ஒதுக்கீட்டு போராட்டத்திற்காக ரத்தம் சிந்திய சொந்த மண்ணில் இன்று உங்களை சந்தித்து ஓட்டு கேட்கிறேன். இட ஒதுக்கீடு கிடைத்தால் உங்கள் பிள்ளைகள் கல்வியில் முன்னேறவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தமிழ்நாட்டில் இன்று கள்ளச்சாராயம் கஞ்சா விற்பனை அதிகமாக இருக்கிறது. கள்ளச்சாராயத்தால் கள்ளக்குறிச்சியில் அடுத்தடுத்து பலர் இறந்துள்ளனர். சாராயம் விற்று உங்களிடம் அடித்து பிடிக்கப்பட்ட பணம் மீண்டும் மாதம் ஆயிரம் ரூபாய் என உங்கள் பணமே உங்களிடம் வருகிறது.

இந்த ஆட்சியில் தரமான கல்வி கிடைப்பதில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. கடந்த 45 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருகிறோம்.

காசுக்காக உங்களுடைய ஓட்டுகளை விற்க வேண்டாம். எதிர்காலத்தில் உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க பா.ம.க., வேட்பாளர் அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் ஓட்டு போட்டு அதிக ஓட்டு வித்தியாசத்தில்வெற்றி பெற செய்யுங்கள்' என்றார்.

சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு, மாவட்ட தலைவர் புகழேந்தி, அமைப்பாளர் பழனிவேல் தஞ்சை மாவட்ட செயலாளர் ஸ்டாலின், ஒன்றிய செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us