/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பசுமை தாயக தலைவர் பா.ம.க.,விற்கு ஓட்டு சேகரிப்பு பசுமை தாயக தலைவர் பா.ம.க.,விற்கு ஓட்டு சேகரிப்பு
பசுமை தாயக தலைவர் பா.ம.க.,விற்கு ஓட்டு சேகரிப்பு
பசுமை தாயக தலைவர் பா.ம.க.,விற்கு ஓட்டு சேகரிப்பு
பசுமை தாயக தலைவர் பா.ம.க.,விற்கு ஓட்டு சேகரிப்பு
ADDED : ஜூலை 04, 2024 09:57 PM

விக்கிரவாண்டி : 'விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் ஒரு விரல் புரட்சி செய்து உங்கள் செல்வாக்கை நிரூபியுங்கள்' என பசுமைத் தாயக தலைவர் சவுமியா அன்புமணி பேசினார்.
விக்கிரவாண்டி தொகுதி குத்தாம்பூண்டி, மூங்கில்பட்டு , பகண்டை வாக்கூர் ஆகிய இடங்களில் பா.ம.க., வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து, ஓட்டு சேகரித்தபோது பேசுகையில், 'இங்கே அதிகளவு திரண்டுள்ள பெண்கள் நீங்கள், இந்த தேர்தலில் ஒரு விரல் புரட்சி செய்து உங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் நம் வீட்டு பிள்ளைகள் இட ஒதுக்கீட்டில் அரசு வேலையிலும் சிறந்த கல்வியையும் பெற முடியும்.
ஆளும் கட்சியினர் பணத்தை உங்களிடம் கொடுத்து ஓட்டுகளை கேட்டாலும் நீங்கள் ஓட்டுகளை பிரித்து போடாமல் மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டளித்து பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வேட்பாளர் அன்புமணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.
தொகுதி பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் பாலு, சிவக்குமார் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.