/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இ.எஸ்., பாலிடெக்னிக்கில் வகுப்பு துவக்க விழா இ.எஸ்., பாலிடெக்னிக்கில் வகுப்பு துவக்க விழா
இ.எஸ்., பாலிடெக்னிக்கில் வகுப்பு துவக்க விழா
இ.எஸ்., பாலிடெக்னிக்கில் வகுப்பு துவக்க விழா
இ.எஸ்., பாலிடெக்னிக்கில் வகுப்பு துவக்க விழா
ADDED : ஜூலை 03, 2024 03:08 AM

விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ். பாலிடெக்னிக் கல்லுாரியில் முதல் மற்றும் நேரடி இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவக்க விழா நடந்தது.
விழாவை பாலிடெக்னிக் கல்லுரி தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, டிப்ளமோ மாணவர்களுக்கு 23 அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில், நிறைய வேலைவாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டார்.
கல்லுரி முதல்வர் சக்திவேல், புதிய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை வரவேற்றார்.
மேலும், பாடத்திட்டத்தின் தன்மை, கல்லுாரியின் சிறப்பு அம்சங்கள், வேலை வாய்ப்பை எப்படி பெறுவது.
கடந்தாண்டு படித்த மாணவர்களுக்கு டி.வி.எஸ்.லுாக்காஸ், அசோக் லேலண்ட், டாடா எலக்ட்ரானிக் போன்ற முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்பட்டதை விளக்கினார்.
வேலைவாய்ப்பு அலுவலர் முத்துக்குமரன், உள்நாடு மற்றும் அயல் நாடுகளிலும் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப் படுகிறது என்றார்.
துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற் றோர், மாணவர்கள் பங்கேற்றனர். துறை தலைவர் விஜய்சார்லஸ் நன்றி கூறினார்.