/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கள்ளச்சாராய இறப்புகளுக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் மாஜி அமைச்சர் சண்முகம் காட்டம் கள்ளச்சாராய இறப்புகளுக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் மாஜி அமைச்சர் சண்முகம் காட்டம்
கள்ளச்சாராய இறப்புகளுக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் மாஜி அமைச்சர் சண்முகம் காட்டம்
கள்ளச்சாராய இறப்புகளுக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் மாஜி அமைச்சர் சண்முகம் காட்டம்
கள்ளச்சாராய இறப்புகளுக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் மாஜி அமைச்சர் சண்முகம் காட்டம்
ADDED : ஜூலை 11, 2024 06:15 AM

விக்கிரவாண்டி : ள்ளச்சாராய இறப்புகளுக்கும், விற்பனைக்கும் தமிழக முதல்வரே முழு பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சண்முகம் கூறினார்.
புதுச்சேரி சாராயம் குடித்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேம்பி மதுரா பூரி குடிசை கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்,38; வேலு,40: ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் சண்முகம் கூறியதாவது:
தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சியல்ல. கள்ளச்சாராய ஆட்சி. மக்களுக்கு ரேஷன் கடையில் அத்தியாவாசிய பொருட்கள் கிடைக்கிறதோ இல்லையோ நாட்டில் மூலை முடுக்குகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு மரக்காணம் மற்றும் செய்யாறில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் இறந்தனர். கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் 66 பேர் இறந்துள்ளனர்.
நேற்று முன்தினம் விக்கிரவாண்டி அடுத்த பூரி குடிசையில் புதுச்சேரி கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. அவர்களது உறவினர்களை கூட பார்க்க அனுமதிக்கவில்லை.
மக்களை பற்றி கவலைப்படாமல், இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதை காட்டிலும் டி.ஜி.பி.,க்கு என்ன வேலை இருக்கிறது. உதயநிதிக்கு சேவை செய்வதுதான் டி.ஜி.பி., வேலையா? ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளுக்கு டி.ஜி.பி., துணை போகிறார். தமிழகத்தில் நடக்கின்ற பல விஷயங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. தமிழகத்தில் நடைபெறும் கள்ளச்சாராய சாவுகளுக்கு தமிழக முதல்வரே முழு பொறுப்பேற்க வேண்டும். அவர்தான் குற்றவாளி. இவ்வாறு அவர் கூறினார்.