ADDED : ஜூலை 09, 2024 11:29 PM

விழுப்புரம் : விழுப்புரம் வணிகர் சங்க கூட்டமைப்பு அலுவலகத்தில், மாவட்ட அலைபேசி வணிகம் மற்றும் சேவை சங்கத்தினர் கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் முகமதுரபிக் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அகிலன் சிறப்புரையாற்றினார். பொருளாளர் மோகன்ராஜ், துணை தலைவர் முருகன், துணை செயலாளர் ரபி, நிர்வாகிகள் தமிழ், ராஜகோபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மொபை போன் ரீசாஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் , உடனே கைவிட வேண்டும். தமிழகத்தில், முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற ஓ.ஏ.பி., பெறும் அனைவரும், அரசின் உதவித்தொகை பெறுவதற்காக, கட்டாயம் மொபைல் போன் வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால், அவர்களுக்கு ரீசார்ஜ்க்கு 20 சதவீதம் செல்போன் கட்டணம் பறிக்கப்படுகிறது.
சிலிண்டர் பதிவு, முதியோர் உதவித்தொகை போன்றவற்றுக்கு மட்டும் பயன்படுத்தும் மொபைல் போன் சேவைக்கு, ஆயுட்கால இலவச அழைப்பை உறுதி செய்யும் சிம் கார்டுகளை வழங்க ஆவண செய்ய வேண்டும்.
தனியார் மொபைல் போன் நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி லாபம் ஈட்டி வரும் நிலையில், ஏழை மக்களை வதைக்கும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளதை திரும்ப பெற வேண்டும். பொது மக்களின் கோரிக்கை ஏற்று அதனை கைவிடாத பட்சத்தில், மாவட்டங்கள் தோறும், மொபைல் போன் வணிகர் சங்கத்தினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.