/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ துணை தலைவர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்குப் பதிவு துணை தலைவர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்குப் பதிவு
துணை தலைவர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்குப் பதிவு
துணை தலைவர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்குப் பதிவு
துணை தலைவர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : ஜூன் 05, 2024 10:58 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே முன்விரோத தகராறில் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் குடும்பத்தினரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த எல்.ஆர்.பாளையம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 50; இவரது மனைவி ஜெயகவுரி, 45; ஊராட்சி துணைத் தலைவர். இவரது குடும்பத்திற்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தேசிங்கு மகன் சசிகுமார், 35; குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை ராமமூர்த்தி மகன் தினேஷ், 25; சசிகுமார் மனைவி வனிதாவிடம், 32; பேசியுள்ளார்.
இதனால், சசிக்குமார் மற்றும் குடும்பத்தினர் தினேஷை திட்டி, தாக்கினர். தடுத்த ராமமூர்த்தி, ஜெயகவுரி ஆகியோரையும் தாக்கினர்.
ஜெயகவுரி அளித்த புகாரின் பேரில், சசிகுமார், அவரது உறவினரான மணிகண்டன், கண்ணதாசன், சசிதரன் ஆகியோர் மீது, வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.