/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தள்ளுவண்டி கடை சூறை 4 பேர் மீது வழக்குப் பதிவு தள்ளுவண்டி கடை சூறை 4 பேர் மீது வழக்குப் பதிவு
தள்ளுவண்டி கடை சூறை 4 பேர் மீது வழக்குப் பதிவு
தள்ளுவண்டி கடை சூறை 4 பேர் மீது வழக்குப் பதிவு
தள்ளுவண்டி கடை சூறை 4 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : ஜூலை 04, 2024 03:42 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் தள்ளுவண்டி கடையை சூறையாடிய சம்பவத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் மருதுார் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி சுஜாதா, 49; இவர், விழுப்புரம் நேருஜி ரோடு பகுதியில், சாந்தி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே கடந்த ஒரு மாதமாக தள்ளு வண்டியில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இதனருகே விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி சிவகாமி, 45; கடந்த ஓராண்டாக தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு புதிதாக தள்ளுவண்டி கடை வைத்த சுஜாதாவிடம், ஏன் இந்த பகுதியில் கடை வைத்தாய் என கேட்டு, திட்டி, தாக்கி கடையிலிருந்த பொருட்களை, சிவகாமி, அவரது கணவர் சுப்ரமணி, 50; அவரது மகன் சிவபிரசாத், 25; சதீஷ், 20; ஆகியோர் சூறையாடினர்.
சுஜாதா அளித்த புகாரின் பேரில், சிவகாமி, சுப்ரமணி, சிவபிரசாத், சதீஷ் ஆகியோர் மீது, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.