ADDED : ஜூன் 10, 2024 01:22 AM
விழுப்புரம் : வளவனுார் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந் தவர் சண்முகம், 73; இவர், விழுப்புரம் எம்.ஜி.ஆர்., நகரில் இரண்டு வீட்டு மனை வாங்கியுள்ளார்.
அரசு தரப்பில் பொது பூங்கா பகுதிக்கு ஒதுக்கிய இடத்தை, விழுப்புரம் காமதேனு நகரைச் சேர்ந்த சுப்ரமணி மகன் பாஸ்கர், எத்திராஜ் மகன் சுப்ரமணி ஆகியோர், கடந்தாண்டு ஜூலை மாதம் சண்முகத்திடம், விற்றனர். பத்திர பதிவுக்கு சென்றபோது, இந்த முறைகேடு நடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சண்முகம், இருவர் மீதும் விழுப்புரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், பாஸ்கர், சுப்ரமணி மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்தனர்.