/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பயிற்சிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வரவழைப்பு பயிற்சிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வரவழைப்பு
பயிற்சிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வரவழைப்பு
பயிற்சிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வரவழைப்பு
பயிற்சிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வரவழைப்பு
ADDED : ஜூன் 23, 2024 05:59 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் பணி ஓட்டுச் சாவடி அலுவலர்கள் பயிற்சிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் விக்கிரவாண்டிக்கு வந்தது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. தேர்தலில் போட்டியிட 57 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஓட்டுப் பதிவுக்காக 275 ஓட்டுசாவடிகளில் பயன்படுத்த 575 ஓட்டுப் பதிவு இயந்திரம், வி.வி.பேட் கருவிகள் வரவழைக்கப்பட்டு முதல் கட்ட பரிசோதனை முடிந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வரும் 24ம் தேதி முதல் துவங்குகிறது. பயிற்சிக்கு பயன்படுத்த நேற்று விழுப்புரம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கிலிருந்து மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி முன்னிலையில் ஏற்றப்பட்டு அங்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் யுவராஜ் ஆகியோர் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் லாரியில் இருந்து இயந்திரங்களை இறக்கினர்.
வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், வி.ஏ.ஓ.,ஜெயப்பிரகாஷ், உதவியாளர் சதீஷ் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.