/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஜூன் 25, 2024 07:23 AM

விழுப்புரம் : விழுப்புரம் கே.கே., ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விழுப்புரம் நகர பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கே.கே., ரோடு மைய பகுதியாக உள்ளது. இதனால், கே.கே., ரோடு சாலையில் பயணிக்கும் பொதுமக்களின் வாகனங்களில் தினந்தோறும் அதிகமாகவே காணப்படும்.
ஆனால், இந்த சாலை பல மாதங்களாக சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளது.
இந்த சாலையில் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பள்ளங்களில் சிக்கி பழுதாகிறது.
பைக்கில் செல்வோர் கீழே விழுந்து படுகாயமடைகின்றனர்.
மழை பெய்தால் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பலர் அதில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.