/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தம்பி சாவில் சந்தேகம்; அண்ணன் புகார் தம்பி சாவில் சந்தேகம்; அண்ணன் புகார்
தம்பி சாவில் சந்தேகம்; அண்ணன் புகார்
தம்பி சாவில் சந்தேகம்; அண்ணன் புகார்
தம்பி சாவில் சந்தேகம்; அண்ணன் புகார்
ADDED : ஜூன் 20, 2024 08:27 PM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த லாரி டிரைவர் குறித்து அவரது அண்ணன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கெடார் அடுத்த செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார், 28: சென்னையில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு முருகன் கோவில் அருகே பாலத்தின் கீழ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அவரது அண்ணன் குமார் அளித்த புகாரின் பேரில், கெடார் போலீசார், வினோத்குமார் உடலைக் கைப்பற்றி இறப்புக்கான காரணம் குறித்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.