/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பல இடங்களில் டோக்கன் விநியோகித்து ஓட்டுப்பதிவு; ஓட்டுச்சாவடியை பூட்டிய பா.ம.க.,வினர் பல இடங்களில் டோக்கன் விநியோகித்து ஓட்டுப்பதிவு; ஓட்டுச்சாவடியை பூட்டிய பா.ம.க.,வினர்
பல இடங்களில் டோக்கன் விநியோகித்து ஓட்டுப்பதிவு; ஓட்டுச்சாவடியை பூட்டிய பா.ம.க.,வினர்
பல இடங்களில் டோக்கன் விநியோகித்து ஓட்டுப்பதிவு; ஓட்டுச்சாவடியை பூட்டிய பா.ம.க.,வினர்
பல இடங்களில் டோக்கன் விநியோகித்து ஓட்டுப்பதிவு; ஓட்டுச்சாவடியை பூட்டிய பா.ம.க.,வினர்
ADDED : ஜூலை 11, 2024 05:43 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதியில் ஓட்டுப்பதிவு நேரம் முடிவதற்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி, ஓட்டுப்பதிவு நடந்தது.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி கப்பியாம்புலியூர் ஓட்டுச்சாவடி எண் 220ல், 70 வயது மதிக்கத்தக்க நபரின் ஓட்டை கள்ள ஓட்டு போட்டு விட்டதாக கூறி நேற்று மாலை 5.15 மணிக்கு பா.ம.க.,வினர் ஓட்டுச்சாவடியை பூட்டினர்.
இதனால் வாக்காளர்கள் யாரும் ஓட்டு பதிவு செய்ய முடியாமல் வெளியே காத்திருந்தனர். தகவல் அறிந்த முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., புஷ்பராஜ் சம்பவ இடத்திற்கு சென்று பா.ம.க.,வினரை சமாதானம் செய்தார்.
இதற்குள் மாலை 6:00 மணி ஆகிவி்ட்டதால், வெளியே நின்றிருந்த வாக்காளர்கள் 87 பேருக்கு டோக்கன் விநியோகித்து மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.
வாக்கூரில் ஓட்டுச்சாவடி எண் 251ல் 161 பேருக்கும், உலகலாம்பூண்டி பூத் எண் 149ல் 30 பேருக்கும், ஒட்டன்காடுவெட்டியில் பூத் எண் 68ல் 30 பேருக்கும் டோக்கன் வழங்கி, ஓட்டுப்பதிவு நடந்தது.