/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பைக்குகள் நேருக்கு நேர் மோதல் வாலிபர் பலி: 5 பேர் படுகாயம் பைக்குகள் நேருக்கு நேர் மோதல் வாலிபர் பலி: 5 பேர் படுகாயம்
பைக்குகள் நேருக்கு நேர் மோதல் வாலிபர் பலி: 5 பேர் படுகாயம்
பைக்குகள் நேருக்கு நேர் மோதல் வாலிபர் பலி: 5 பேர் படுகாயம்
பைக்குகள் நேருக்கு நேர் மோதல் வாலிபர் பலி: 5 பேர் படுகாயம்
ADDED : ஜூன் 22, 2024 05:54 AM

வானுார் : கிளியனுார் அருகே 2 பைக்குகள் நேருக்கு நேராக மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் இறந்தார். 5 பேர் படுகாயமடைந்தனர்.
கிளியனுார் அடுத்த டி.பரங்கனி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தணிகைவேல் மகன் சீனிவாசன், 21; பி.எஸ்சி., பட்டதாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் விக்னேஷ், 20; என்பவருடன், நேற்று முன்தினம் பல்சர் பைக்கில் புதுச்சேரிக்கு சென்றார்.
இரவு 9:30 மணிக்கு, புதுச்சேரியில் இருந்து இருவரும் வீட்டிற்கு திரும்பினர். இந்த பைக்கை, விக்னேஷ் ஓட்டினார்.
புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச் சாலையில், ஒழிந்தியாம்பட்டு பாலத்தைக் கடந்த போது, எதிரே நான்கு பேர் அமர்ந்து வந்த பேசினோ பைக் விக்னேஷ் ஓட்டிச்சென்ற பைக் மீது நேருக்கு நேராக மோதியது. இதில், விக்னேஷ், சீனிவாசன், மற்றொரு பைக்கில் வந்த காட்ராம்பாக்கம் அருள் மகன் அஜய்குமார், கனகராஜ் மகன் யோகேஷ்வரன், வில்வமணி மகன் விவேகானந்தன், காத்தவராயன் மகன் சாந்தசீலன் ஆகிய 4 பேர் என 6 பேரும் படுகாயமடைந்தனர்.
உடன் 6 பேரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், நேற்று காலை இறந்தார்.
விபத்து குறித்து கிளிய னுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.