/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மீன் வியாபாரிகளுக்கு அரசு மானியத்துடன் பைக் மீன் வியாபாரிகளுக்கு அரசு மானியத்துடன் பைக்
மீன் வியாபாரிகளுக்கு அரசு மானியத்துடன் பைக்
மீன் வியாபாரிகளுக்கு அரசு மானியத்துடன் பைக்
மீன் வியாபாரிகளுக்கு அரசு மானியத்துடன் பைக்
ADDED : ஜூலை 23, 2024 11:06 PM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், மீன் வியாபார தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் மானியத்துடன் குளிர்காப்பு பெட்டி பொருத்திய பைக் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நடந்த நிகழ்ச்சியில், முதல் கட்டமாக 6 பயனாளிகளுக்கு மீன் வியாபாரத்துக்கான, குளிர்காப்பு பெட்டி பொருத்திய பைக்குகளை கலெக்டர் பழனி வழங்கி பேசினார்.
தமிழக மீன்வள கூட்டுறவு இணையம் வாயிலாக, கடந்த 2023-24ம் ஆண்டில், மத்திய அரசு மற்றும் பயனாளிகளின் பங்களிப்புடன் பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தலா 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மீன்வியாபாரம் செய்ய குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட பைக் 6 பேருக்கு வழங்கப்பட்டது.
இதில், பொது பிரிவினருக்கு 40 சதவீத அரசு மானிய தொகை 30 ஆயிரம் ரூபாய் வீதம் 3 பயனாளிகளுக்கு 90 ஆயிரம் ரூபாயும், மீனவ மகளிருக்கு 60 சதவீத மானிய தொகை 45 ஆயிரம் ரூபாய் வீதம் 3 பயனாளிகளுக்கு 1,35,000 ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.
மீன்வளத்துறை துணை இயக்குனர் வேல்முருகன், உதவி இயக்குனர் நித்திய பிரியதர்ஷினி உடனிருந்தனர்.