ADDED : ஜூன் 16, 2024 06:42 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் சுற்றுசூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை கீதா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஊர்வலம், முக்கிய வீதிகள் மற்றும் கடைவீதி மெயின்ரோடு வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
ஊர்வலத்தில், பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்தும், சுற்றுச்சூழல், மின் சேமிப்பு ஆற்றல் குறித்தவிழிப்புணர்வு கோஷம் எழுப்பியும், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கியும் சென்றனர்.
பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் பூபாலன், ஆசிரியர் சரவணன், உடற்கல்வி ஆசிரியர்கள் புருேஷாத்தமன், கன்னியம்மாள் மற்றும் பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள் பங்கேற்றனர்.