ADDED : ஜூலை 04, 2024 12:45 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு மண்டல அளவில் விருது வழங்கும் விழா நடந்தது.
விழுப்புரம், தோகைப்பாடியில், தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, மண்டல தலைவர் சம்பந்தம் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் லிங்கராமன் முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் அரிபிரசாத் வரவேற்றார்.
விழுப்புரம் மண்டலத்துக்குட்பட்ட பள்ளிகளில் கடந்தாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் சி.பி.எஸ்.இ., தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற 27 மாணவர்களுக்கு கேடயம் மற்றும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
திருமண தகவல் அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் ராமலிங்கம், சீதாராமன், கண்ணன், ராஜூலு, கோதண்டராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.