Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தேசிய ஒற்றுமைக்கான விருது- விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய ஒற்றுமைக்கான விருது- விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய ஒற்றுமைக்கான விருது- விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய ஒற்றுமைக்கான விருது- விண்ணப்பங்கள் வரவேற்பு

ADDED : ஜூலை 04, 2024 09:59 PM


Google News
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், சர்தார் பட்டேல் தேசிய ஒற்றுமைக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:

இந்திய நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக, முழு பங்களிப்புடன் ஈடுபடும் நபர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக அனுசரிக்கப்படும். சர்தார் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதி அன்று, மத்திய அரசின் மிக உயரிய விருதான சர்தார் பட்டேல் தேசிய ஒற்றுமைக்கான விருது, இந்திய அரசின் உள் அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருதினை பெற ஜாதி, மதம், இனம், பாலினம், பிறந்த இடம், வயது, தொழில், நிறுவனம் மற்றும் அமைப்பு என எந்தவித பாகுபாடுமின்றி, இந்திய குடிமகன் எவராயினும் தகுதியுடையவர்கள் ஆவர்.

மேலும், இவ்விருது தொடர்பான விபரங்களுக்கு www.awards.gov.in என்ற இணையதள முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தகுதிவாய்ந்தநபர்கள், வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us