/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரத்தில் அ.ம.மு.க., ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் அ.ம.மு.க., ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் அ.ம.மு.க., ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் அ.ம.மு.க., ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் அ.ம.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 22, 2024 11:54 PM

விழுப்புரம் : தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரத்தில் அ.ம.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விழுப்புரம் நகர செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் முத்து, கோவிந்தராஜ், குமரன், மாநில தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., கணபதி கண்டன உரையாற்றினார்.
வழக்கறிஞரணி மகேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் ராஜி, நகர செயலாளர் அபிஅன்சாரி, ஒன்றிய செயலர் ஜெயபால், வார்டு செயலாளர்கள் மகேந்திரன், ரவி உள்ளிட்ட விழுப்புரம் மாவட்ட அ.ம.மு.க., வினர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் மீண்டும், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி வருவதோடு, அனைத்து வித வரிகளையும் உயர்த்தி வரும் ஆளும் தி.மு.க., அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க வேண்டும், அரசு துறைகளில் ஊழலை தடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.