/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஓட்டு எண்ணுவதற்கான பணியிடம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு ஓட்டு எண்ணுவதற்கான பணியிடம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
ஓட்டு எண்ணுவதற்கான பணியிடம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
ஓட்டு எண்ணுவதற்கான பணியிடம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
ஓட்டு எண்ணுவதற்கான பணியிடம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
ADDED : ஜூன் 03, 2024 06:38 AM

விழுப்புரம், : விழுப்புரத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் நுண்பார்வையாளர்களுக்கு, கணினி மூலம் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், விழுப்புரம் (தனி) தொகுதி தேர்தல் ஓட்டு எண்ணும் மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்கள் மற்றும் நுண்பார்வையாளர்களுக்கு, இரண்டாம் கட்டமாக கணினி மூலம் குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி தலைமையில், ஓட்டு எண்ணிக்கை பொதுப்பார்வையாளர் அகிலேஷ்குமார் மிஷ்ரா முன்னிலையில் கணினி மூலம் குலுக்கல் நடந்தது. இதில் 306 அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிகழ்வில் தேர்தல் பிரிவு அலுவலர் தமிழரசன், தனி தாசில்தார் (தேர்தல்) கணேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.