ADDED : ஜூலை 17, 2024 12:06 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்க விழா குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வி.சாலையில் நாளை 18ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்டத்தை அமைச்சர் பொன்முடி துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தில் முதல் கட்டமாக வி.சாலை, சின்ன தச்சூர், மேலக்கொந்தை, ஆவுடையார்பட்டு, எசாலம், ெதன்பேர், டி.புதுப்பாளையம், கொங்கராம்பூண்டி, குத்தாம்பூண்டி, ரெட்டிக்குப்பம் ஆகிய கிராமங்கள் பயனடைகின்றன.
அதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்திற்கு உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் பாலச்சந்திரன், குலோத்துங்கன் முன்னிலை வகித்தனர். மேலாளர் டேவிட் வரவேற்றார்.
கூட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் அந்தந்த துறை திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலர் வினோத், டாக்டர் ராமகிருஷ்ணன், வேளாண்மை உதவி இயக்குனர் கங்கா கவுரி உட்பட பலர் பங்கேற்றனர்.