/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மின் கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் மின் கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2024 11:09 PM

விழுப்புரம் : தமிழகத்தில் தொடர் மின் கட்டண உயர்வையும், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் தி.மு.க., அரசை கண்டித்தும், விழுப்புரத்தில் அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சக்கரபாணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அர்ஜூனன் எம்.எல்.ஏ., வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சண்முகம் கண்டன உரையாற்றினார்.
முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், தீனதயாளன், முன்னாள் நகர செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, கண்ணன், முருகன், ராஜா, விஜயன், பன்னீர், மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் பாலசுந்தரம்.
எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் அற்புதவேல், ஐ.டி.பிரிவு மண்டல தலைவர் காமேஷ், மாவட்ட மாணவரணி சக்திவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் குமரன், செயலாளர் பிரிதிவிராஜ், நகர துணைச் செயலாளர் செந்தில், மாவட்ட ஜெ., பேரவை தலைவர் திருப்பதி பாலாஜி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலர் ஜெகதீஸ்வரி சத்யராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் 3வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும், வரிகளை உயர்த்தி, அத்தியவசிய பொருள்களின் விலை ஏற்றத்துக்கும், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கும் காரணமான தி.மு.க., அரசை கண்டித்து பேசினர்.