/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாலையில் கிடக்கும் டெலிபோன் பாக்ஸ் சாலையில் கிடக்கும் டெலிபோன் பாக்ஸ்
சாலையில் கிடக்கும் டெலிபோன் பாக்ஸ்
சாலையில் கிடக்கும் டெலிபோன் பாக்ஸ்
சாலையில் கிடக்கும் டெலிபோன் பாக்ஸ்
ADDED : ஜூன் 04, 2024 06:03 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் சாலையில் விழுந்து கிடக்கும் டெலிபோன் இணைப்பு ஜங்ஷன் பாக்ஸ் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
விழுப்புரம் திரு.வி.க., வீதி - கீழ்செட்டி வீதி சந்திப்பில், தொலைபேசி லைன் இணைப்பு ஜங்ஷன் பாக்ஸ்கள் இரண்டு உள்ளது. அந்த பாக்ஸ்கள் மீது, கடந்த ஒரு வாரத்திற்கு முன் வாகனம் மோதி கீழே விழுந்தது.
அந்த இரும்பு இணைப்பு பாக்ஸ்கள் சாலையில் விழுந்து கிடப்பதால், சாலை திரும்பும் இடத்தில் வாகன ஓட்டிகள் அதன் மீது மோதி விழுவதும், அந்த வழியாக செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. அதனை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.