ADDED : ஜூலை 08, 2024 05:02 AM

விழுப்புரம்: கஞ்சனுார் அரசு பள்ளியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, பரிசளிப்பு, மரக்கன்று நடுதல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
இந்தியன் ஆயில் நிறுவன அலுவலர் கருணாகரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ராஜாராமன், இயற்கை ஆர்வலர் ராமன் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, நடந்த பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
விழாவில், மாணவர்களுக்கு மரக்கன்றுகள், நுாலகத்திற்கு புத்தகங்கள், சானிட்டரி நாப்கின் இயந்திரம் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.