/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தீ விபத்தில் வெடித்த காஸ் சிலிண்டர்; அணைக்க சென்று தப்பிய ஊழியர்கள் தீ விபத்தில் வெடித்த காஸ் சிலிண்டர்; அணைக்க சென்று தப்பிய ஊழியர்கள்
தீ விபத்தில் வெடித்த காஸ் சிலிண்டர்; அணைக்க சென்று தப்பிய ஊழியர்கள்
தீ விபத்தில் வெடித்த காஸ் சிலிண்டர்; அணைக்க சென்று தப்பிய ஊழியர்கள்
தீ விபத்தில் வெடித்த காஸ் சிலிண்டர்; அணைக்க சென்று தப்பிய ஊழியர்கள்
ADDED : ஜூன் 02, 2024 11:13 PM

விழுப்புரம் : விழுப்புரம், மேல்தெரு சென்னை மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 48; அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர். இவரது வீட்டின் கீழ் தளத்தில் பியூட்டி பார்லர் உள்ளது. மாடியில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு இவரது மனைவி அனுராதா, மகன் ஷைலேஷ் ஆகியோருடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.
அதிகாலை, 3:45 மணிக்கு, மின்னழுத்தம் காரணமாக வீட்டில் இருந்த பிரிட்ஜ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. திடுக்கிட்டு எழுந்த செந்தில்குமார் குடும்பத்தினர் அலறியடித்து வெளியே ஓடினர்.
மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் சிவசங்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வீட்டில் பக்கவாட்டு படிக்கட்டு வழியாக மாடிக்கு செல்ல முயன்ற போது, வீட்டில் இருந்த காஸ் சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. சமையலறையில் சிலாப்கள் உடைந்து, வீட்டின் சுவர் விரிசல் ஏற்பட்டது. வீடு முழுதும் தீ பரவி புகைமூட்டம் ஏற்பட்டது.
உள்ளே செல்ல முயன்ற இரண்டு தீயணைப்பு வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின், சமையல் அறை சுவரை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்தன. விழுப்புரம் மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.