Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/� பாதுகாப்பு பணியில் 550 போலீசார்... குவிப்பு;  தயார் நிலையில் ஓட்டு எண்ணும் மையம்

� பாதுகாப்பு பணியில் 550 போலீசார்... குவிப்பு;  தயார் நிலையில் ஓட்டு எண்ணும் மையம்

� பாதுகாப்பு பணியில் 550 போலீசார்... குவிப்பு;  தயார் நிலையில் ஓட்டு எண்ணும் மையம்

� பாதுகாப்பு பணியில் 550 போலீசார்... குவிப்பு;  தயார் நிலையில் ஓட்டு எண்ணும் மையம்

ADDED : ஜூன் 04, 2024 05:36 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம் : விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதி ஓட்டு எண்ணிக்கையையொட்டி, ஓட்டு எண்ணும் பணியில் அரசு ஊழியர்கள் 220 பேரும், மையத்தில் பாதுகாப்பு பணிக்கு 550 போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க600 போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடந்தது. திண்டிவனம் (தனி), வானுார் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள 1,732 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையமான விழுப்புரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 3 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இங்கு, 24 மணி நேர சுழற்சி முறையில், 3 பிரிவாக 24 எல்லை காவல் படையினரும், 45 தமிழ்நாடு சிறப்பு காவல் படை, 3 டி.எஸ்.பி.,க்கள் உட்பட 135 விழுப்புரம் மாவட்ட போலீசார் உட்பட 207 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது மட்டுமின்றி ஓட்டு எண்ணும் மையத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று 4ம் தேதி எண்ணும் பணி நடக்கிறது. அதனையொட்டி, ஓட்டு எண்ணும் மையான விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில்550 போலீசார்


எஸ்.பி., தீபக் சிவாச் தலைமையில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் திருமால், தினகர், 4 டி.எஸ்.பி.,க்கள், 20 இன்ஸ்பெக்டர்கள் உட்பட சப் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் என மொத்தம் 550 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அது மட்டுமின்றி, தபால் ஓட்டுகள் மற்றும் மின்னணு இயந்திரங்களில் பதிவாகிய ஓட்டுகளை எண்ணுவதற்கும், தபால் ஓட்டுகளை, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு வருவது. ஒவ்வொரு சுற்று முடிவுகளை அறிவிப்பது உள்ளிட்ட மையத்தில் உள்ள பல்வேறு பணிகளுக்கு அரசு ஊழியர்கள் 220 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் லோக்சபா தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 1,732 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஒரு சட்டசபை தொகுதிக்கு 14 டேபிள் வீதம் மொத்தம் 84 டேபிள்கள் தயார் நிலையில் உள்ளன. இதில் திண்டிவனம், வானுார், விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு 20 சுற்றுகளும், விழுப்புரம், திருக்கோவிலுார் தொகுதிகளில் 21 சுற்றுகளும், உளுந்துார்பேட்டை தொகுதியில் மட்டும் 25 சுற்றுகளும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதே போல், தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 9 டேபிள்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிகளுக்குச் செல்லும் போலீசார், நேற்று முதல் தயார் நிலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது மட்டுமின்றி, மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க சுற்றுக்காவல் மற்றும் ரோந்து பணிகளில் இன்று 4ம் தேதி 600 போலீசார் ஈடுபட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கையை யொட்டி, விழுப்புரம் ஓட்டு எண்ணும் மையம் மட்டுமின்றி, மாவட்டத்திலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆய்வு


மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி நேற்று ஓட்டு எண்ணும் மையத்தில் நேற்று ஆய்வு செய்தார்.

மையத்தில், ஓட்டுகள் எண்ணும் அறைக்கு வெளியே போடப்பட்டுள்ள இரும்பு கூண்டுகள், வேட்பாளர்களின் ஏெஜன்ட்டுகள் அமரும் இருக்கைகள்.

தபால் ஓட்டுகளை எண்ணும் பெட்டிகள் உள்ள அறை மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், இன்று நடைபெறும் ஓட்டு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அறிவுறுத்தி ஆலோசனை நடத்தினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us