/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முதல் நாளில் 5 பேர் மனு தாக்கல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முதல் நாளில் 5 பேர் மனு தாக்கல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முதல் நாளில் 5 பேர் மனு தாக்கல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முதல் நாளில் 5 பேர் மனு தாக்கல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முதல் நாளில் 5 பேர் மனு தாக்கல்
ADDED : ஜூன் 15, 2024 04:47 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, முதல் நாளில், 5 பேர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. நேற்று (14ம் தேதி) வேட்பு மனு தாக்கல் துவங்கியது. வரும் 21ம் தேதி வரை மனு தாக்கல் நடக்கிறது. 24ம் தேதி, மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. 26ம் தேதியன்று, மனுக்கள் வாபஸ் பெற இறுதி நாளாகும்.
முதல் நாளான நேற்றைய தினம், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம், தர்மபுரி மாவட்டம், பென்னகரம் அக்னி ஆழ்வார், 43, மனு தாக்கல் செய்தார். இவர், ரூ.50 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிந்து வந்தார்.
தொடர்ந்து, கோயம்புத்துார், சுந்தராபுரம் நுார் முகமது, 66; மேட்டூர் அணையைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன், 63, ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். திருச்சி, உறையூரை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர் ராஜேந்திரன், 63; ஏ.டி.எம்., கிரெடிட் கார்டுகளை மாலையாக அணிந்து வந்து மனு தாக்கல் செய்தார்.
நாமக்கல் மாவட்டம், செல்லம்பட்டி அகிம்சா சோசியலிட்ஸ் கட்சி தலைவர் ரமேஷ், 42; என்பவரும் நேற்று மனு தாக்கல் செய்தார். நேற்று முதல் நாளில் சுயேச்சை வேட்பாளர்கள் 5 பேர் மனு தாக்கல் செய்தனர்.