/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கஞ்சா, போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 5 பேர் கைது கஞ்சா, போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 5 பேர் கைது
கஞ்சா, போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 5 பேர் கைது
கஞ்சா, போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 5 பேர் கைது
கஞ்சா, போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 5 பேர் கைது
ADDED : ஜூலை 16, 2024 12:38 AM

திண்டிவனம்: திண்டிவனம் ராஜாங்குளம் கோவில் அருகே கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கஞ்சா, போதை மாத்திரை விற்பனை தொடர்ந்து நடந்து வருவதும், போலீசார் பிடிப்பதும், பின் பிடிபட்டவர்கள் ஜாமினில் வந்து மீண்டும் அதே தொழிலில் ஈடுபடுவதும் சகஜமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை திண்டிவனம் ராஜாங்குளம் முருகன் கோவில் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் 250 கஞ்சா மற்றும் 100 கிராம் எடையுள்ள 15 போதை மாத்திரைகள், சிரஞ்சி வைத்தருந்தது தெரியவந்தது.
விசாரணையில், சஞ்சீவிராயன்பேட்டை மணிகண்டன், 27; சிவசக்தி நகர் தினேஷ், 24; செல்வகுமார் 24; திருவள்ளுவர் நகர் நவீன், 26; அன்னமங்கலம் சிலம்பரசன், 29; என தெரியவந்தது. உடன் 5 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
இதில், மணிகண்டன், செல்வகுமார் ஆகியோர் கஞ்சா, போதை மாத்திரை விற்ற வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் ஜாமினில் வெளியே வந்து மீண்டும் அதே தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.