Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பவ்டா நிறுவன 40ம் ஆண்டு விழா கவிதை, கட்டுரை போட்டி நடத்த ஏற்பாடு

பவ்டா நிறுவன 40ம் ஆண்டு விழா கவிதை, கட்டுரை போட்டி நடத்த ஏற்பாடு

பவ்டா நிறுவன 40ம் ஆண்டு விழா கவிதை, கட்டுரை போட்டி நடத்த ஏற்பாடு

பவ்டா நிறுவன 40ம் ஆண்டு விழா கவிதை, கட்டுரை போட்டி நடத்த ஏற்பாடு

ADDED : ஜூலை 28, 2024 04:29 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: பவ்டா நிறுவனத்தின் 40ம் ஆண்டு விழாவையொட்டி, கவிதை, கட்டுரை போட்டிகள் நடைபெறவுள்ளது.

பவ்டா குழும நிறுவனர் ஜாஸ்லின் தம்பி கூறியதாவது,

கடந்த 1985ம் ஆண்டு சாதாரண மக்களையும், வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்களும் மேலோங்கி வர வேண்டும் என்ற சேவை பணியோடு மாட்டு வண்டி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தை விழுப்புரத்தில் துவக்கினோம். இதன் மூலம் விழிப்புணர்வு பயிற்சி, மகளிர் சுயஉதவிக்குழு உருவாக்கப்பட்டது. பவ்டா வழிகாட்டுதலின் பேரில், தற்போது 6 மாநிலங்களில் 111 கிளைகளோடு, ஆயிரம் பணியாளர்கள், லட்ச கணக்கில் உறுப்பினர்கள் உள்ளனர்.

பவ்டா நிறுவனத்தின் 40ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, மாணவர்கள், பவ்டா பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் இலக்கிய திருவிழா நடத்தப்பட உள்ளது. அதில், கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

எழுத்தாளர்களை ஊக்குவிக்த்திட ரூ.10 லட்சம் வரை பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பங்கேற்போரில் 366 பேர் பரிசு வழங்கப்பட உள்ளது.

'பவ்டா இனியவை நாற்பது' என்ற பொது தலைப்பு மற்றும் துணை தலைப்புகளோடு கவிதை, கட்டுரை போட்டிகள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஒரியா மொழிகளில் நடக்கவுள்ளது.

போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் மேலும் விபரங்களுக்கு இ.மெயில் bwdakavithai @bwda.org.in யு-டியூப் - @bwda7833, இணையதளம் www.bwda.org.in ஆகியவற்றிலும், மொபைல் 9342548559, 8778012186 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

கவிதை மற்றும் கட்டுரைகள் பவ்டா கிளைகள் அல்லது மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மூலம் வரும் ஆக.20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதில், வெற்றி பெறுவோருக்கு தனித்தனி மொழிகளுக்கு பரிசு வழங்கப்படும்.

முதல் பரிசு ரூ.10 ஆயிரம்; 2ம் பரிசு ரூ.7,500; 3ம் பரிசு ரூ.5,000; ஆறுதல் பரிசு ரூ.1000 வழங்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் தரப்பில் முதல் பரிசு 24 பேருக்கு ரூ.5,000; 2ம் பரிசு 24 பேருக்கு ரூ.3,000; 3ம் பரிசு 24 பேருக்கு ரூ.2,000; ஆறுதல் பரிசு 76 பேருக்கு ரூ.1000 வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us