ADDED : ஜூலை 25, 2024 05:11 PM
விழுப்புரம்: விழுப்புரம் சரகத்தில் 33 இன்ஸ்பெக்டர்கள், பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
கடந்த லோக்சபா தேர்தலின் போது, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்ட இன்ஸ்பெக்டர்கள் பலர், மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
தேர்தல் முடிந்ததையொட்டி, தற்போது அவர்கள் மீண்டும் அந்தந்த மாவட்டங்களுக்கு, இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி 33 இன்ஸ்பெக்டர்களை இடம் மாற்றம் செய்து, டி.ஐ.ஜி., திஷாமித்தல் உத்தரவிட்டுள்ளார்.
கோட்டக்குப்பம் வள்ளி, நெய்வேலிக்கும், சேத்தியாதோப்பு முத்துலட்சுமி கோட்டக்குப்பத்திற்கும், விழுப்பரம் வனஜா விருத்தாசலத்திற்கும், கடலுார் பொருளாதார குற்றப்பிரிவு மரியாசோபி மஞ்சுளா விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கடலுார் மதுவிலக்கு பிரிவு ஸ்ரீபிரியா விழுப்புரம் சைபர் கிரைம் பிரிவுக்கும், கடலுார் ராதிகா விழுப்புரம் ஐ.எஸ்.டி.சி., பிரிவுக்கும், விழுப்புரம் டவுன் உதயகுமார் வடலுாருக்கும், விழுப்புரம் மேற்கு ரேவதி சேத்தியாதோப்பிற்கும், சிதம்பரம் அண்ணாமலை நகர் கல்பனா விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நெய்வேலி சுமதி திருக்கோவிலுாருக்கும், திட்டக்குடி தமிழ்ச்செல்வி, திருக்கோவிலார் மதுவிலக்கு பிரிவுக்கும், புதுப்பேட்டை பாலகிருஷ்ணன் திருக்கோவிலுாருக்கும், திருப்பாதிரிப்புலியூர் கலைச்செல்வி திட்டக்குடிக்கும், விழுப்புரம் சைபர் கிரைம் சங்கீதா, பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.