/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பைக்கில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனம் அருகே 3 பேர் கைது பைக்கில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனம் அருகே 3 பேர் கைது
பைக்கில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனம் அருகே 3 பேர் கைது
பைக்கில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனம் அருகே 3 பேர் கைது
பைக்கில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனம் அருகே 3 பேர் கைது
ADDED : ஜூலை 18, 2024 11:32 PM

திண்டிவனம்: புதுச்சேரியிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில் கடத்தியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் டவுன் போலீசார் நேற்று முன்தினம் இரவு திண்டிவனத்தில் மேம்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சரேியில் இருந்து பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொண்டு வந்தது தெரியவந்தது.
விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கிளாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், 20; தனசேகர், 28; என்பதும், புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு, ராணிப்பேட்டையில் கூடுதல் விலைக்கு விற்ற கொண்டு சென்றது தெரியவந்தது.
அனைத் தொடர்ந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து, இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
வானுார்
கிளியனுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் பேராவூர் பஸ் நிறுத்தம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அந்த நபர், 35 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம், விட்டிலாபுரம் அடுத்த பைராகி மடம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகுமார், 39; என்பதும், புதுச்சேரியில் இருந்து கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்க முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்து, மணிகுமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.