/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மதுபாட்டில்கள் கடத்தல் பெண் உட்பட 3 பேர் கைது மதுபாட்டில்கள் கடத்தல் பெண் உட்பட 3 பேர் கைது
மதுபாட்டில்கள் கடத்தல் பெண் உட்பட 3 பேர் கைது
மதுபாட்டில்கள் கடத்தல் பெண் உட்பட 3 பேர் கைது
மதுபாட்டில்கள் கடத்தல் பெண் உட்பட 3 பேர் கைது
ADDED : மார் 12, 2025 07:39 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார், நேற்று மதுரபாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர்.
அதில், அவர்கள் 318 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், விழுப்புரம் அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த துரை, 66; சித்தலம்பட்டு சக்திவேல் மகன் சரண், 20; என தெரிந்தது. உடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
இதேபோன்று, விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், மதுவிலக்கு போலீசார் சோதனையின் போது, பஸ்சில் புதுச்சேரி மதுபானங்கள் கடத்திய திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் தமிழ்வேலன் மனைவி பூங்கொடி, 40; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 108 குவாட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.