/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 3 பேர் மருத்துவமனையில் 'அட்மிட்' பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 3 பேர் மருத்துவமனையில் 'அட்மிட்'
பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 3 பேர் மருத்துவமனையில் 'அட்மிட்'
பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 3 பேர் மருத்துவமனையில் 'அட்மிட்'
பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 3 பேர் மருத்துவமனையில் 'அட்மிட்'
ADDED : ஜூலை 04, 2024 10:07 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று காலை 9:30 மணிக்கு சிலர், உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஒருவரின் இலையில் ஊற்றிய சாம்பாரில் பல்லி கிடந்துள்ளது.
இதையறிந்ததும், அதே ஓட்டலில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த விழுப்புரம், ஆசாகுளத்தைச் சேர்ந்த ஆனந்த், 49; கண்டாச்சிபுரம் அடுத்த திருமலைபட்டு கோவிந்தசாமி, 60; குணசேகர், 35; ஆகியோருக்கு லேசான மயக்கம் ஏற்படுவதாகவும், வாந்தி வருவதாகவும் கூறினர்.
உடன், ஓட்டல் ஊழியர்கள் அவர்கள் 3 பேரையும் ஆட்டோ மூலம், விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஸ்டாலின் ராஜரத்தினம், அந்த ஓட்டலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின், ஓட்டல் உரிமையாளரிடம் சுகாதாரமான முறையில் சமைக்க வேண்டும். இல்லையென்றால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.