/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பறக்கும் படை சோதனையில் 23 கிலோ கொலுசு சிக்கியது பறக்கும் படை சோதனையில் 23 கிலோ கொலுசு சிக்கியது
பறக்கும் படை சோதனையில் 23 கிலோ கொலுசு சிக்கியது
பறக்கும் படை சோதனையில் 23 கிலோ கொலுசு சிக்கியது
பறக்கும் படை சோதனையில் 23 கிலோ கொலுசு சிக்கியது
ADDED : ஜூன் 13, 2024 02:16 AM

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே ஆவணங்களின்றி கொண்டு சென்ற, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிக் கொலுசுகளை பறக்கும் படையினர் பறிமுதல்செய்தனர்.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் பறக்கும் படையினர்தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி நேற்று காலை விக்கிரவாண்டி அடுத்த மேலக்கொந்தை சாலையில் மேம்பாலம் அருகே துரைச்செல்வன் தலைமை யிலான தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது,அவ்வழியே வந்த 'டாடா நெக்ஸா' காரை நிறுத்தி சோதனை செய்ததில், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ 234 கிராம் வெள்ளி கொலுசுகள்ஆவணங்களின்றி கொண்டு செல்வது தெரிய வந்தது.
விசாரணையில் விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் கிராமத்தை சேர்ந்த கவியரசன்,சிறு வியாபாரிகளிடம் விற்பனை செய்ய கொண்டு செல்வது தெரிய வந்தது.
ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லாததால் கொலுசுகளை பறிமுதல் செய்து, தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார்யுவராஜிடம் ஒப்படைத்தனர். அவர், கொலுசுகளை சீலிட்டு, உதவி கருவூலத்தில் ஒப்படைத்தார்.