/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு விரைவு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 11 பேர் படுகாயம் அரசு விரைவு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்
அரசு விரைவு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்
அரசு விரைவு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்
அரசு விரைவு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்
ADDED : ஜூன் 20, 2024 08:35 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு விரைவு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் படுகாயமடைந்தனர்.
துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு மேல் மேல் குளிர்சாதன வசதி கொண்ட அரசு விரைவு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை, பெரம்பலுாரைச் சேர்ந்த விசு, 41; என்பவர் ஓட்டினார்.
இந்த பஸ் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அரசு ஊழியர் நகர் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் விசு, பயணிகள் புதுக்கோட்டை சைதய் பாரூக், 70; ரமேஷ், 32; ராஜா, 38; ராசு, 51; ராஜி, 32; சென்னை, மாதவரம் கீதா, 22; மீனாட்சி, 61; உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்தில் காயமடைந்தோரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், மீட்பு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் மீட்கப்பட்டது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.